ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பணிகள் தீவிரம் !

ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்காக, மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரம் பெறும் பணியை விரைவாக மேற்கொள்ளும்படி, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, உணவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில், மாவட்ட வழங்கல்
அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலர் பிரதீப் யாதவ், உணவு வழங்கல் ஆணையர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, மக்களிடம் இருந்து ஆதார் விபரங்கள் ரேஷன் கடைகளில் மூலம் வாங்கப்பட்டு வருகின்றன; அந்த பணி, விரைவாக நடக்கிறதா என்பதை மாவட்ட, வட்ட வழங்கல் அதிகாரிகள், ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று, தினமும் ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...