மூட்டுவலியைப் போக்க என்ன சாப்பிடலாம்?

ஓமேகா 3 ஃபேட்டி(Fatty) ஆசிட் நிறைந்த உணவுகள்: ஏனெனில், அதில் உங்கள் மூட்டுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. ஆளி விதைகள், வால்நட் மற்றும் சில மீன் வகைகளில் இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது.


ஹைசல்பர் உணவுகள்: மெத்தைல் - சல்போனைல்- மீத்தேன் என்னும் வடிவத்தில் சல்பர் உள்ளது. இது பிரபலமாக எம்.எஸ்.எம். என அழைக்கபடும். இது ஒரு சிறந்த கலவை. இது உங்கள் மூட்டுகளில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் இது திசுக்களை மீட்டெடுக்க உதவுகிறது. இந்த சல்பர் சத்துகள் இறைச்சி, மீன், முட்டை, சீஸ், ட்ரை ஆப்ரிகாட், தேயிலை, முட்டைகோஸ் மற்றும் பூண்டில் அதிகமாக உள்ளது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்: பழங்களிலும் காய்கறிகளிலும் செரிமான நொதிகள் அதிகமாக உள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாக உள்ளது. மேலும் மூட்டு வலிக்கு பழங்களில் பப்பாளி மற்றும் அன்னாசி மிகச் சிறந்தது. பப்பாளி பாபாயின் என்னும் முக்கியமான வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. அன்னாசியில் ப்ரொமலைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இந்த இரண்டு வேதிப்பொருட்களிலுமே நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...