உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் கமிஷனின் புதிய உத்தரவுகள் !

தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் வெற்றிக்கான வியூகங்களை ஒவ்வொரு கட்சிகளும் வகுத்துத் வர,தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள்,
528பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர்உள்ளிட்ட 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிப் பதவிகளில், பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கி அரசு அறிவித்துள்ளது.தேர்தல் அறிவிப்புக்கு கால அவகாசம் குறைவாகவுள்ள நிலையில், இதுவரை பெண்களுக்கான வார்டுகள் முழுமையாகப் பிரிக்கப்படவில்லை.இதனால், மாநில தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல்கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் நடத்தப்படும் இடம், வாக்குச்சாவடிகள் குறித்தெல்லாம் பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல்கமிஷன் வலியுறுத்தியுள்ளது. கிராமப்புறங்களில், 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி, நகர்ப்புறங்களில் 1,200 வாக்காளர்களுக்கு ஒருவாக்குச்சாவடி, மாநகராட்சிகளில் 1,400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடியும் அமைக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியபள்ளிக் கட்டடங்கள், அரசுப் பள்ளி கட்டடங்கள், அரசு உதவிபெறும் மற்றும் பிற பள்ளி கட்டடங்கள், அரசு கட்டடங்களில், வாக்குச் சாவடிகளைஅமைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், வாக்குச்சாவடியாக பயன்படுத்திய கட்டடங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களின் உறுதிப்பாட்டை சோதித்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்நிலையம், ஊராட்சி அலுவலகம், விருந்தினர் விடுதி, வழிபாட்டுத் தலங்கள், சத்துணவுக்கூடம், மருந்தகம் மற்றும் சத்திரங்கள் போன்ற இடங்களில்வாக்குச்சாவடிகள் அமைக்கக்கூடாது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு மையங்களில் சரிவுப்பாதைகள்அமைத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும்’ என பல்வேறு உத்தரவுகளை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இதற்கானபணிகள் தொடங்கியுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...