அரசுப்பள்ளிகள் மூடுவதை அரசு மறைக்கிறது !!!

கல்வி வரும் காலத்தில் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக போய்விடும் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன. காரணம், தனியார் பள்ளிகள் ஆயிரத்திலும் லட்சத்திலும் கல்விக் கட்டணங்களை வாரிக் குவிக்க, அரசுப்பள்ளிகளோ அடுத்த என்ன செய்வது என்று
தெரியாமல் திகைத்து நிற்பது மறுக்க முடியாத உண்மை” என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள் கல்வியாளர்கள். இந்நிலையில் சட்டசபையில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், “அரசுப்பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை” என்று பேசியிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “அரசுப்பள்ளிகள் மூடப்பட்ட விவரங்களை அரசு மூடி மறைக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், அரசுப்பள்ளிகள் எதுவும் மாணவர்கள் வருகை இல்லாததால் மூடப்படவில்லை என கூறியிருக்கிறார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பாப்பாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பப்பள்ளி இந்த கல்வி ஆண்டில் மூடப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் பல அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த கசப்பான உண்மையை சட்டப்பேரவையில் அமைச்சர் மறைத்திருக்கிறார். சென்னையில் மாநகராட்சிப் பள்ளிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் கடந்த 2002-2003இல் எட்டு பள்ளிகளும், 2003-2004இல் இரண்டு பள்ளிகளும், 2004-05இல் 13 பள்ளிகளும், 2005-06இல் 16 பள்ளிகளும், திமுக ஆட்சியில் 2008-09இல் 14 பள்ளிகளும், 2009-10இல் ஒரு பள்ளியும், 2010-11இல் நான்கு பள்ளிகளும் மூடப்பட்டன. இதற்குப் பிந்தைய ஆண்டுகளில் மூடப்பட்ட பள்ளிகள் விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மேலும், பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முன்னேற்றம் என்பது அதிகமான ஆசிரியர்களை நியமனம் செய்ததால் ஏற்பட்டது அல்ல. மாறாக, மாணவர் சேர்க்கையில் உண்டான வீழ்ச்சியால் ஏற்பட்ட மாற்றம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அரசுப்பள்ளிகளை சத்தமில்லாமல் மூடும் அரசின் கொள்கை கண்டனத்துக்குரியது. அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...