கூகுள் wi-fi-யுடன் போட்டியிடும் ஃபேஸ்புக்!

இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கு எந்தவிதமான குறையுமில்லை. இருப்பினும், போட்டிக்கு கோதாவில் நிறைய நிறுவனம் வந்துவிட்டதால், நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் இந்தியா முழுவதும் சிறு கிராமங்கள்
முதற்கொண்டு ‘Express wi-fi’ சேவையைத் தொடங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் லோக்கல் ISP (Internet Service Provider) பயன்படுத்தி தனக்கான இண்டெர்நெட் சேவையை பெற்றுக் கொள்ளலாம். இதுவரை, 125 கிராமங்களில் இதற்கான முன்னோட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்திப் பார்த்துள்ளது.

குறைவான வேகம், சரியான திட்டமிடல் இல்லாதது போன்ற காரணங்களால் தனது முதல் Express wi-fi முயற்சியை தோல்வியில் முடித்த ஃபேஸ்புக் நிறுவனம், தனது இரண்டாவது முயற்சியில் மக்களைக் கவர வேண்டும் என்றநோக்கில் மிகவும் கவனத்துடன் (BSNL)பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து செய்து வருகிறது.

ஏற்கனவே, இந்தியா முழுவதும் 23 ரயில் நிலையங்களில் 2 லட்ச மக்களை இணைத்து Express wi-fi திட்டத்தை கூகுள் நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. தற்போது, அதையும் தாண்டி 400 ரயில் நிலையங்கள்மூலம் 10 லட்சம் மக்களை இணைக்கும் இலக்கில் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனமும் Express wi-fi திட்டத்தில் தீவிரம் காட்டிவருகிறது. கூகுள் நிறுவனம் தனது அடுத்தகட்ட திட்டத்தில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...