தமிழக அமைச்சரவை திடீர் மாற்றம்: மாஃபா பாண்டியராஜன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமனம். !

*தமிழக அமைச்சரவை திடீர் மாற்றம்: மாஃபா பாண்டியராஜன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமனம்.*

சென்னை, தமிழக அமைச்சரவை இன்று திங்கட்கிழமை திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அமைச்சராக மாபா பாண்டியராஜன் எம் எல் ஏ நியமிக்கப்பட்டு உள்ளார். ஆவடி
சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பால்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். எஸ்.பி. சண்முகநாதன் வகித்துவந்த இலாக்கா கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த பென்ஜமினுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் பென்ஜமினுக்கு ஊரக தொழில் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சி நாளை கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...