*உள்ளாட்சி தேர்தல் எதிரொலி : ரூ.7,000 கோடிக்கு திட்ட பணிகள்*
உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, உள்ளாட்சி துறை சார்பில், 7,000 கோடி ரூபாய்க்கான திட்டப் பணிகளை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பெரும்பான்மை இடங்களை பெற்று, ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. எனினும், கடந்த முறை, 23
எம்.எல்.ஏ.,க்களை மட்டும் பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த தி.மு.க., இம்முறை, 89 எம்.எல்.ஏ.,க்களுடன், மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
மேலும், பெரும்பாலான இடங்களில், தி.மு.க., மிகக்குறைந்த ஓட்டுகளில் தான், வெற்றி வாய்ப்பை இழந்தது.
இதை, அ.தி.மு.க., எதிர்பார்க்கவில்லை.
மேலும், ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.,விற்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை. தலைநகரான சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்களில், அ.தி.மு.க.,வை விட,தி.மு.க., அதிக இடங்களை பிடித்துள்ளது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 2011ல், அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன், அதிக உள்ளாட்சி அமைப்புகளையும் பிடித்தது போல, இம்முறையும் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என, அ.தி.மு.க., நினைக்கிறது.
அதேபோல, சட்டசபை தேர்தலில் தவறவிட்ட வெற்றியை, உள்ளாட்சி தேர்தலில் பெற்று விட வேண்டும் என்ற துடிப்புடன் தி.மு.க., உள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தலில், கடும் போட்டி நிலவும் சூழல்ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக, அ.தி.மு.க., பல்வேறு ஆயத்தப் பணிகளை துவக்கி உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்களை, மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டு, கவுன்சிலர்களால் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதை தொடர்ந்து, நேற்று சட்டசபையில், 110 விதியில், முதல்வர் ஜெயலலிதா, உள்ளாட்சி துறையில், 7,000 கோடி ரூபாய்க்கான அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களை கவரும் வகையில், கிராம ஊராட்சிகளில், 'அம்மா பூங்கா' மற்றும், 'அம்மா உடற்பயிற்சிக் கூடம்' அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வரின் அதிரடி அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.