கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டம் !

சென்னை: ''தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்; மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:


l பால் உறைகள் தயாரிக்க, தனியாரிடம் இருந்து, பாலிதீன் பிலிம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை தவிர்க்க, தரமான பாலிதீன் பிலிம் தயாரிக்க, விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டையில், ஆண்டுக்கு, 5,000 டன் திறனுடைய, பாலிதீன் பிலிம் தயாரிப்பு தொழிற்சாலை, 83 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

l நீலகிரி மாவட்ட, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பால் பண்ணையின் திறனை மேம்படுத்த, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்; நவீன பாலகங்கள் அமைக்கப்படும்; குளிர்சாதன வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும். இப்பணிகள், 5 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

l சேலம் மாவட்ட, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பால் பண்ணையில், ஆறு மாதம் வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு லிட்டர், 'டெட்ரா பேக்' பால் பாக்கெட்டுகள் தயாரிக்க, தேவையான இயந்திரங்கள், 28 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

l மதுரை பால் பண்ணையில், 13 கோடி ரூபாய் செலவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்மாற்றிகள், வெண்ணெய் சிப்பம் கட்டும் இயந்திரம் போன்றவை அமைக்கப்படும்.

l சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் உள்ள குடியிருப்புகள், 4 கோடி ரூபாய் மதிப்பில், பழுது பார்த்து புனரமைக்கப்படும்.

l தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம்; மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலன் கருதி, ஓய்வூதியத் தொகையுடன் கூடுதலாக மாதம், 3,500 ரூபாய் பெறும் வகையில், புதிய ஓய்வூதிய திட்டம்

செயல்படுத்தப்படும்.

ஓய்வூதிய தொகையில், 50 சதவீதத் தொகை, குடும்ப ஓய்வூதியமாக அனுமதிக்கப்படும்; இதற்காக ஆண்டுக்கு, 27 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

l தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம்; மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பணியாளர்களுக்கு, மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; இதற்காக ஆண்டுக்கு, இரண்டு கோடி ரூபாய் செலவு ஏற்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...