தமிழக அரசுப் பள்ளிகள் மூடப்படவில்லை என்று கூறிவருகிறது. ஆனால் உண்மை அதற்கு மாறாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 38 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமகல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்துதாஸ் தகவல் அறியும் உரிமைச்சட்டதின் கீழ் 32 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பல கேள்விகள் அடங்கிய தொகுப்பை அனுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த 12 மாவட்ட கல்வி அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களில் கடந்த மூன்றாண்டுகளில் 38 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அரசு, இதுவரை எந்த அரசு பள்ளியும் மூடப்படவில்லை என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், 155 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 22 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, கிருஸ்துதாஸ் கூறுகையில்,’ 50 சதவிகித தலித் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பி உள்ளனர். மேலும் பொருளாதரத்தில் மிகவும் நலிவடைந்த மக்கள் தங்களின் குழந்தைகளின் ஆரம்பக்கல்விக்கு அரசுப் பள்ளிகளை மட்டும்தான் சார்ந்துள்ளார்கள். அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால்அவர்களின் கல்வி பாதிப்படைகிறது என்றார். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டுமானால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்’ என்றார்.
ஆனால் இந்தாண்டு தமிழக் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தது. இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்படும் ஏன் பள்ளிகள் மூடப்படுகின்ரன என்ற கேள்வியை கல்வியாளர்கள் எழுப்புகின்றனர்.