நம் கல்வி... நம் உரிமை!- கீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை !

தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்ல, முழுச் சமுதாயத்துக்கும் பயன்படும்வகையில் அரசாங்கத்தின் விதிகளையும் வரையறைகளையும் உருவாக்குவதே பொதுக்கொள்கை என்பார் அமெரிக்கப் பேராசிரியர் டக்ளஸ் கொமெரி. சமுதாயத்தின் பல்வேறு சமூகக் குழுக்களையும் மனதில்கொண்டு
அரசின் கொள்கைகளை உருவாக்கச் சிறப்பான வழி அதுவே. நமது நாட்டிலும் தேசிய கல்விக் கொள்கை 2016 -ஐ உருவாக்குவதற்கான கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் அமெரிக்கக் கல்வியாளர் ஜான் திவே. நூறாண்டுகளுக்கு முன்னால் அவர் துருக்கி நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். சமூகத்துக்குத் தேவையான முறையில் எப்படிப்பட்ட நோக்கங்களுக்குக் கல்வி சேவை செய்யும் என்பதில் தெளிவு வேண்டும். கல்வி சார்ந்த என்ன மாதிரியான குறிக்கோள்களை அது சாதிக்க விரும்புகிறது என்பதிலும் அரசுக்குத் தெளிவு வேண்டும். தெளிவில்லாமல் செய்யப்படும் சீர்திருத்தங்களெல்லாம் அரைகுறையாக முடிந்துவிடுவதுடன் எதையும் சாதிக்க முடியாமல், புதிய சிந்தனைகளின் முன்னால் நிற்க முடியாமல் கடைசியில் கைவிடப்படுவதே அதன்தலைவிதி. அப்படி இருந்தால் மட்டும்தான், அரசால் அதற்கான செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என்றார் அவர். அந்தத் தெளிவு இல்லை என்றால், அந்தச் சீர்திருத்தம் சரியாக வராது. எதையும் சாதிக்க முடியாமல் கடைசியில் கைவிடப்படுவதே அதன் தலைவிதி. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...