சமையல் காஸ் நேரடி மானிய திட்டத்தால், அரசு சேமித்துள்ளதாக கூறப்படும் தொகையில், 15 சதவீதம் மட்டுமே உண்மையில் சேமிக்கப்பட்ட தொகை' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சமையல் காஸ் மானியத் தொகை, பயனாளி களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப் படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் சேமிக்கப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது.
மிச்சமான தொகை:
இந்நிலையில், இந்த நேரடி மானிய திட்டம் குறித்த சி.ஏ.ஜி., அறிக்கை, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2014 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், 35,400 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. அதே நேரத்தில், கடந்த, 2015 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, 12,084 கோடி ரூபாய் நேரடி மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாச
தொகையான, 23,316 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்ட மானிய தொகையாகும். இதில், 21,552 கோடி ரூபாய், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஏற்பட்ட லாபம்.அதன்படி பார்த்தால், உண்மையில் மிச்சப்படுத்தப்பட்ட மானியம், 1,763 கோடி ரூபாய் தான்.
நிதியாண்டில் மிச்சம்:
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பெட்ரோலிய அமைச்சகம், 2015 - 16ம் நிதியாண்டில், 9,211 கோடி ரூபாய் காஸ் மானியம் மிச்சப்படுத்த முடியும் என கணக்கிட்டுள்ளது. அதே நேரத்தில், எண்ணெய் நிறுவனங்கள் இதை, 5,107 கோடி ரூபாயாக கணக்கிட்டு உள்ளன.
பயன்படுத்தாத அல்லது ரத்து செய்யப்பட்ட நுகர் வோர், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களை வாங்கி னால் மிச்சமாகும் மானியத்தையும் அமைச்சகம் சேர்த்துள்ளது. அதே நேரத்தில், நாட்டின் சராசரி சிலிண்டர் பயன்பாடு, 6.27 சிலிண்டராக உள்ளது. தேசிய சராசரி பயன் பாட்டை கணக்கில் எடுத்துக் கொண்டால், 2015 - 16ம் நிதியாண்டில், மானிய சேமிப்பு, 4,813 கோடி ரூபாய் தான்.
ரூ. 3,473 கோடி:
மேலும் கடந்த, 2014 - 15ம் நிதியாண்டில், ஒரு சிலிண்டருக்கு அளிக்கப்பட்ட,338 ரூபாய் மானியத் தொகையையே, 2015-16க்கும், எண்ணெய் நிறுவனங்கள் கணக்கிட்டுள்ளன. ஆனால், அமைச்சகத்தின் கணக்கின்படி, 2015 - 16ல் வழங்கப்பட்ட மானியம், 169.45 ரூபாய் தான். இதைத் தவிர, 62.27 லட்சம் மக்கள் மானியம் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர்.
அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த, 2015 - 16ல், உண்மையான மானிய சேமிப்பு, 3,473 கோடி ரூபாயாக இருக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
தொடரும் மோசடி:
நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் மோசடி கள் தொடர்வதாக, சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ், வணிக ரீதியில் பயன்படுத்தப்படுவது தொடர்கிறது
* ஒரே நபர் பல்வேறு இணைப்புகள் பெறுவது தடுக்கப்பட்டு உள்ளதாக எண்ணெய் நிறுவனங் கள் கூறுகின்றன
* ஆனால், பல்வேறு எண்ணெய் நிறுவனங் களில் இணைப்புகளை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர்
* இதைத் தடுக்க, அனைத்து எண்ணெய் நிறு வனங்களும் தங்களுடைய நுகர்வோர் விபரங் களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.