சென்னை பல்கலை சிண்டிகேட்டில் சலசலப்பு !

சென்னை பல்கலை யில் புதிய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருக்கான தேர்வு தொடர்பாக, சிண்டிகேட் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை பல்கலையில் துணைவேந்தர் பணியிடம், ஆறு மாதங்களாக காலியாக உள்ளதால், ஒருங்கிணைப்பு குழு மூலம், பல்கலை இயங்கி வருகிறது. இதில், உயர் கல்வி செயலர் கார்த்திக்,
சென்னை பவன்ஸ் ராஜாஜி பள்ளியின் மூத்த முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் மற்றும் கல்லுாரி கல்வி இயக்குனர் சேகர் ஆகியோர் பதவி வகித்தனர்.

இவர்களில், கல்லுாரி கல்வி இயக்குனர் சேகர் வேறு பதவிக்கு மாற்றப்பட்டார். அதனால், அவரது இடத்தில் புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்நிலையில், சென்னை பல்கலையின் மாதாந்திர சிண்டிகேட் கூட்டம், நேற்று மாலை பல்கலை வளாகத்தில் நடந்தது.

இதில், உயர்கல்வித்துறை செயலர் (பொறுப்பு) கார்த்திக், கல்லுாரி கல்வி இயக்குனர் (பொறுப்பு) மதுமதி மற்றும் சென்னை பல்கலை பதிவாளர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், சிண்டிகேட் உறுப்பினர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


அப்போது, பேராசிரியர்களில் ஒரு தரப்பினர், &'ஒருங்கிணைப்பு குழுவில் உயர் கல்வி சார்ந்த கல்வியாளர் ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும்&' என, கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், ஒருங்கிணைப்பு குழுவில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும், மதுமதி ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்படுவதாக, உயர்கல்வி செயலர் கார்த்திக் அறிவித்தார்.

அதற்கு, பேராசிரியர்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், தேர்தல் நடத்தும் சூழல் உருவானது. இதை சமாளிக்கும் வகையில், உயர் கல்வி செயலர் கார்த்திக், புதிய உறுப்பினரின் பெயரை அறிவித்து விட்டு கூட்டத்தை முடித்தார்.

பேராசிரியர்கள் கூறுகையில், பல்கலையின் நிர்வாகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், தனியார் பள்ளி முதல்வர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உயர்கல்வி சார்ந்த கல்வியாளர் யாரும் இல்லை. இதுவரை சென்னை பல்கலைக்கு இந்த நிலை வந்ததில்லை என்றனர்.

இதுகுறித்து பல்கலை பதிவாளர் டேவிட் ஜவஹரிடம் கேட்ட போது, சிண்டிகேட் கூட்டத்தில் மதுமதி ஐ.ஏ.எஸ்., ஒருங்கிணைப்பு குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூட்டத்தின் பதிவு புத்தகத்திலும் இடம் பெற்று விட்டது. பேராசிரியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக, &'மினிட்&' பதிவு புத்த கத்தில் எந்த தகவலும் இல்லை, என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...