யோகா விருது; விண்ணப்பங்கள் வரவேற்பு !

சிறந்த யோகா ஆசிரியருக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி தமிழ்த்தாய் நகரில் இயங்கி வரும் யோகா அண்டு யோகா

ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன், இந்தாண்டு முதல் புதிய விருதை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறந்த யோகா ஆசிரியருக்கான யோகன் விருது (சிறந்த யோகா ஆசிரியர் விருது) வழங்கப்பட உள்ளது. இவ்விருதானது, பல்வேறு சாதனை மாணவர்களை உருவாக்கும் யோகா ஆசிரியர்களை, ஊக்குவிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு, யோகன் விருதுடன், பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு, செப்டம்பர் 11ம் தேதி முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண மண்டபத்தில் நடக்கும் விழாவில், விருது வழங்கப்படும்.

இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள், பொதுச்செயலாளர், யோகா அசோசியேஷன், எண்.14, மூன்றாவது குறுக்கு தெரு, தமிழ்தாய் நகர், என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

மேலும், விபரங்களுக்கு 90434 88115, 98943 88115 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...