அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர பிரச்சனைகளை பற்றி எழுதுப்போது தெளிவாக தெரிந்த பின்பு எழுதுங்கள். !

ஊடகங்களுக்கு தொழிலாளர்கள் சார்பா மீடியா துறை நண்பர்களுக்கு,
தயவு செய்து  அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர பிரச்சனைகளை பற்றி எழுதுப்போது  தெளிவாக தெரிந்த பின்பு எழுதுங்கள்.
மக்களிடம் தவறாது செய்தியினை பரப்பாதீர்கள்.
7வது ஊதியக்குழு இமாலய சம்பளம் உயர்வு என எழுதும் போது நான்
தற்சமயம் பெறும் சம்பளம் நான் வேலை பார்க்கும் நேரம் என் வேலைப் பளு என அனைத்தையும் பற்றி எழுதுங்கள், உதாரணமாக நான் தற்சமயம் 125% அகவிலைபடியும் சேர்த்து தற்சமயம் பெறும் சம்பளம்16000இப்போது அறிவித்திருக்கும் சம்பளம் 18000ஆனால் அகவிலைப்படி 0 எனவே கீழ் நிலை ஊழியர்கள் பெறும் புதிய உயர்வு வெறும் 2000 மட்டுமே மேலும் பிடித்தம் PF , GIS போன்றவைகள் போக இன்னும் குறையும் இது அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு மாறாது. தனியாரோடு ஒப்பிடும் அறிவாளிகளே தனியார் துறையில் வருட சம்பளம் உயர்வு என்பது குறைந்த பட்சம் 1000 முதல் 10000 வரை கூட இருக்கலாம். ஆனால் இங்கு 200 ல் இருந்து ஆரம்பம் அதை பெறவும் தற்சமயம் என் அதிகாரிகள் v.good சான்றளித்தால் மட்டுமே பெறமுடியும் என சட்டம் கொண்டு வந்து விட்டார்கள், வெளியில் இருந்து பார்க்கும் உங்களுக்கு வேண்டுமானால் இது அரசின் ஒழுங்கு நடவடிக்கையாக தெரியலாம் உண்மை நிலை என்னவாகும் தெரியும? அதிகாரிக்கு ஒத்துப் போகாத மானமுள்ள பல தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஊழல் அதிகாரிகள் இருக்கும் வரை, ஒழுங்காக சட்டதிட்டதிட்டங்களை கடைபிடித்து ஜால்ரா அடிக்காமல் உண்மை ஊழியர்கள் அதிகம் பாதிக்கபடுவார்கள். ஆனால் வேலையே செய்யாமல் அதிகாரிகளை மிரட்டி கொண்டிருக்கும்  அகங்கார  சங்க நிர்வாகிகளுடன் இருப்பவர்களும் அதிகாரிக்கு இத்யாதி வேலை செய்து கொண்டிருப்பவர்கள் தான் அனுபவிப்பார்கள். மேலும் மீடியா மூலம் ஏதோ மத்திய அரசு அள்ளி கொடுத்து விட்டதாக பாஜக தம்பட்டம் அடிப்பதை நீங்களும் பிரச்சுரம் செய்வதால் விலைவாசி தான் ஏறும் ஒழிய பண்ணாட்டு கம்பெனிகள் முதற்கொண்டு அதானி,அம்பானி கள் தான் கொள்ளையடிப்பார்கள். உதா. பருப்பு விலை உயர்வு தவிர்க்க முடியாத சக்தியாக அம்பானிகளும் அதானிகளும் நடக்க வழிவகுக்கும் .ஏற்கணவே நாங்கள் இந்த விலைவாசிக்கே விழிபிதுங்கி உள்ளோம்.எங்கள் சம்பளத்தில் தற்போது நாங்கள் வாங்குவதில் உயர்வு 2% மட்டும்தான் புரிந்து கொள்வீர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...