ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் உர்ஜித் பட்டேல் !

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வருகிற செப்.,4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ரகுராம் ராஜனும் மீண்டும் கவர்னராக பணியாற்ற விரும்பவில்லை என கூறினார்.

இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் இது குறித்து ஆலோசனை நடத்தினர். அவர்களது ஆலோசனையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் சுபிர் கோகர்ன், தற்போதைய துணை கவர்னர் உர்ஜித் படேல், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரில் ஒருவருக்கு, அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்தது.



இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய துணை கவர்னர் உர்ஜித் படேல் புதிய கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



யார் இந்த உர்ஜித் பட்டேல்



52 வயதான உர்ஜித் பட்டேல் பொருளாதார நிபுணராகவும், வங்கிகளுக்கான நிதி ஆலோசகராகவும் பணி புரிந்து வருகிறார். ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள இவர் தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பதவி வகித்து வருகிறார்.



இவர் லண்டன் பல்கலையில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில் பி.ஏ., பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலையில் வணிகத்தில் எம்.பில் முடித்தார். இவர் ஏல் பல்கலைகழகத்தின் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.



உர்ஜித் பட்டேல் ஐ.எம்.எஃப் எனப்படும் உலக பன்னாட்டு நிதியத்தில் இந்திய நாட்டின் சார்பில் பணி புரிந்து உள்ளார். குஜராத் மாநில பெட்ரோலியத் துறை இயக்குநர் உட்பட பல்வேறு நிதித் துறை சார்ந்த உயர் பதவிகளில் பணி புரிந்த அனுபவம் கொண்டவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...