சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னையில் படித்த இளைஞர்களுக்கு, மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்வதற்கான போட்டி தேர்வு பயிற்சிகளும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளும், சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஷெனாய் நகர், &'அம்மா&' அரங்கத்தில் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியுள்ளன.
வகுப்பை மேயர் சைதை துரைசாமி துவக்கி வைத்தார். கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.