அரசியல் சட்டப்படி, வரும் அக்டோபரில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்; தவிர்க்க முடியாத காரணங்களால், தற்போதுள்ள தொகுதி வரை யறையின்படியே தேர்தல் நடக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - பா.ம.க., சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.கடந்த, 2011ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி வரை யறை செய்து, உரிய இடஒதுக்கீடு வழங்கி, தேர்தல் நடத்த வேண்டும்; மின்னணு இயந் திரங்களை பயன்படுத்த வேண்டும்; வெளி மாநில அதிகாரிகளை நியமித்து, தேர்தல்
நடத்த வேண்டும் என, மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு, நீதிபதிகள் ஜி.ரமேஷ், எம்.வி.முரளி தரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசார ணைக்கு வந்தது. அப்போது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தாக்கல் செய்த பதில் மனு:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட வர்களின் பதவிக்காலம், 2016, அக்., 24ல் முடிவடை கிறது. எனவே, சட்டப்படி, அக்டோபரில் தேர்தல் நடத்த வேண்டும். பஞ்சாயத்து வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2014ம் ஆண்டில் தான் கிடைத்தது.அனைத்து நடைமுறை களையும் பின் பற்றி, ஒரு லட்சத்துக்கும் மேலான வார்டு களில், மறுவரையறை செய்யும் பணியை, குறைவான நாட்களில் முடிக்க முடியாது. இடஒதுக்கீடு பிரிவி னருக்காகஒதுக்கப்பட்ட இடங்கள், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இருக்கும்.
ஏராளமான வார்டுகள் இருப்பதால், புதிய வரைய றையை, அக்டோபருக்குள் முடிக்க முடியாது. தற்போது இருக்கும் வார்டுகளின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.எனவே, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான், பஞ்சாயத் துகளில் இடஒதுக்கீடு இருக்கும்; 2001ம் ஆண்டு அடிப்படையில் இருக்காது.
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு, தடை விதிக்க தேவையில்லை.ஏற்கனவே, முழு வீச்சில், தேர்தல் பணிகள் சென்று கொண்டிருக்கின் றன.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள் ளது.
மனு குறித்து, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணை யை, செப்., 1க்கு, 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளி வைத்தது.