உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிக்குது...ஜாக்பாட்!

விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிகிறது.
அதனால், அதற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்திட தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றியை, எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தக்க வைத்துக் கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும்; சட்டசபை தேர்தலில் அடைந்த தோல்வியை ஈடுகட்ட இந்த உள்ளாட்சித் தேர்லில் தங்கள் பலத்தை நிரூபிக்க தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன.



இந்நிலையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க., மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிய பிறகு தேர்தலை சந்தித்தால் மக்களிடம் நம்பிக்கை பெற முடியும் என நம்புகிறது. இதனால் உள்ளாட்சிகளுக்கு திடீரென பல கோடி ரூபாய் மானியம் ஒதுக்கியுள்ளது.



அதில், நகராட்சிகளுக்கு குறைந்தது 2 கோடி ரூபாய் அளவில் பணிகள் நடக்கும்படி முடிவு செய்துள்ளனர். இதில் பாதி நிதி அரசு மானியமாக அரசு வழங்குகிறது. மீதி நிதியை அந்தந்த உள்ளாட்சிகளின் பொது நிதியில் இருந்து செலவு செய்திடவும், இந்த திட்டத்தை நிறைவேற்ற உடனடியாக உள்ளாட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி டெண்டர் விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாகவே நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் திடீரென அவசரக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



தமிழகம் முழுவதும் இப்பணிகளுக்கான டெண்டர் விடப்பட்ட பிறகே உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென தெரிகிறது. பதவி காலம் முடியும் நேரத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் சாலைகள் அமைத்து மக்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம். மேலும், தங்களுக்கும் அதிக கமிஷன் கிடைக்கும். அதன் மூலம், வருகின்ற தேர்தலை சந்திக்கலாம் என மக்கள் பிரதிநிதிகள் 'ஜாக்பாட்' அடித்தது போல் மகிழ்ச்சியில் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...