நீதித் துறையை மதிக்கிறோம்:மத்திய அரசு!

உச்ச நீதிமன்ற நீதிபதியின் கடுமையான எச்சரிப்புக்கு பின் 250 புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் மற்றும் பல மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் அமைப்பு
செயல்பட்டு வருகிறது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் ,தலைமை நீதிபதிகளும் இடம் பெற்றுள்ளனர். நடைமுறையில் உள்ள இந்த கொல்ஜியம் முறைக்கு பதிலாக புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ஆட்சியாளர்களும் இடம்பெறும் வகையில் செய்யபட்டது. இதற்கு தேசிய நீதிபதிகள் நியமன சட்டமும் கொண்டு வரபட்டது. ஆனால் இதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதனால் கொல்ஜியம் முறையை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இதை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் ,இதற்கான புதிய வரைவு உருவாக்கபட்டு வருகிறது.

இதை புதியதாக உருவாக்குவதில் காலதமாதம் ஏற்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பணியிடங்கள் அதிகமான அளவில் காலியாக உள்ளது. மொத்தம் 478 காலியிடங்கள் உள்ளன.

நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதிகளின் பணியிடங்களை கொலிஜீயம் முறைப்படி நிரப்ப 75 பேர்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் பிப்ரவரி மாதமே கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் உச்சநீதிமன்ற கொலிஜியம் நீதிமன்றம் விரக்தியடைந்துள்ளது.

இதற்கிடையே சட்டக் கமிஷனின் ஆணையின்படி , நீதிபதிகள் நியமிக்க வேண்டும் என்ற பொது நல வழக்கும் தொடுக்கபட்டது. இந்த விசாரணை நேற்று தலைமை நீதிபதிகள் தாக்கூர், கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான முகுல் ரோத்ஹியிடம் நீதிபதி டி.எஸ் தாக்கூர் கடுமையான கேள்விகளை கேட்டார். நீதிபதி கூறியது: எதற்கும் எல்லை உண்டு.நாங்கள் பரிந்துரைத்து அனுப்பிய அந்த பட்டியல் எங்கே?. அதில் எதாவது அதிருப்தி இருந்தால் திருப்பி அனுப்பிவிடுங்கள் ,நாங்கள் பரிசீலித்து கொள்வோம். தற்போது நீதிமன்றங்கள் 40% நீதிபதிகளை வைத்து தான் செயல்பட்டு வருகின்றது. இதனால் வழக்குகள் தேக்கமடைந்த நிலையில் இருக்கிறது. ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பே ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நிலை வந்துவிடும்.

குஜராத் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.ஷா ,டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வால்மீகிமேத்தா போன்றோரின் இடமாற்றத்துகான பரிந்துரைகளுக்கும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இப்படி அசட்டலாக இருந்தால் இடமாற்றம் செய்யபடும் நீதிபதிகளுக்கு எந்தவித நீதித் துறை பணியும் வழங்கபடமாட்டாது. நாங்கள் பரிந்துரை செய்து அனுப்பி வைத்த கோப்புகள் எந்த மூலையில் கிடக்கிறது. அது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்கவில்லையென்றால் , சட்டரீதியாக தலையிட வேண்டிய அவசியம் வரும் என்று கோபத்துடன் கூறினார்.

இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியது : விரைவில் 250 நீதிபதிகளை நியமிக்க வழங்கபடும். நாங்கள் நீதித் துறையை அவமதிக்கவில்லை, மதிக்கிறோம். நாடளவில் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 1,079 நீதிபதி பணியிடங்கள் உள்ளன.ஆனால் ஆகஸ்ட் 1 ந் தேதி நிலவரப்படி 478 காலி பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...