தலைவலி, உடல்வலி என பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு பெரும்பாலான மக்கள் சுய வைத்தியம் பார்த்துக் கொள்கின்றனர். அப்படிப் பார்த்துக் கொள்வது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. சுய மருத்துவமும், அதிக அளவிலான வலி நிவாரண மாத்திரைகளும்
பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று சொன்னாலும் யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள். இதனால் அந்த நேரத்தில் தற்காலிகமாக வலி குறைந்தாலும்கூட, பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக கல்லீரல் பாதிப்பு, வயிறு வலி, அல்சர், மன அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, கருச்சிதைவு, வாயு தொல்லை போன்ற நோய்கள் வருகின்றன.
மேலும், விஞ்ஞானிகள் பெரும்பாலான வலி நிவாரண மாத்திரைகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலம் அமெரிக்காவில் மட்டும் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் காரணமாக ஆண்டுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, அதற்கு மாற்றாக பக்கவிளைவு இல்லாத புதிய வலி நிவாரண மாத்திரைகளை பாரிஸில் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். முதலில் கண்டுபிடித்த மாத்திரைகளை எலிகளுக்கு அளித்து பரிசோதித்தனர். எலிகளுக்கு பக்கவிளைவு எதுவும் ஏற்படவில்லை. பின்னர், சில மக்களிடமும் மாத்திரைகளை வழங்கி பரிசோதித்து பார்த்தனர். அதிலும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பதால் அந்த மாத்திரைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளனர். இருந்தாலும், சாதாரணமாகவே வலி நிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.