தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(செப்., 1) வெளியிடப்பட்டது !

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(செப்., 1) வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று துவங்கி, செப்., 30 வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, இன்று(செப்., 1) துவங்குகிறது; வரைவு வாக்காளர்
பட்டியல், இன்று வெளியிடப்பட்டது. 18 வயது நிரம்பியவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, செப்., 30 வரை, விண்ணப்பம் அளிக்கலாம். செப்., 11 மற்றும், 25ல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மனுக்கள் பெற, சிறப்பு முகாம் நடத்தப்படும்.



வரைவு வாக்காளர் பட்டியலை, www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். நகராட்சி கமிஷனர், தாசில்தார் அலுவலகங்களிலும், ஓட்டுச்சாவடிகளிலும், பார்வைக்கு வைக்கப்படும். electoral servicessearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும், பெயர்களை தேடி கண்டுபிடிக்க, வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் இணைய தளத்தில், 'ஆன்லைன்' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.



திருநெல்வேலி, கரூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். சென்னை மாவட்டத்துக்குட்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலை, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டார். இதன்படி, சென்னையில் மொத்த வாக்காளர்கள் 39,87, 359 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் மொத்தம்- 19,72, 641 பேர். பெண்கள் 20,13, 768 பேரும், இதரவாக்காளர்கள் 950 பேரும் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...