ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவை !

நேரடி தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ள தால், உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் தேவை குறைந்துள்ளது.


தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என உள்ளாட்சி அமைப்புகள், இரண்டு பிரிவாக உள்ளன. நகர்ப்
புறப்பகுதிகளில், 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன; இவற்றிற்கு, வரும் அக்டோபரில் தேர்தல் நடக்கிறது.


இதில் மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு, நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சி

களில், 919 கவுன்சிலர்; நகராட்சிகளில், 3,613; பேரூராட்சிகளில், 8,288 கவுன்சிலர் பதவி களுக்கு மட்டுமே, நேரடி தேர்தல் நடக்கவுள்ளது.

பொதுமக்கள் ஓட்டு போட்டு, கவுன்சிலர்களை தேர்வு செய்யவுள்ளனர்; கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு, மேயர், துணைமேயர், நகராட்சி சேர்மன் ஆகியோரை தேர்வு செய்ய உள்ளனர். இதனால், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு இயந்திரங் களின் தேவை, பெருமளவு குறைந்துள்ளது.



இதுகுறித்து, தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த, 2011 உள்ளாட்சி தேர்தலில், நகர்ப்புறங் களில், 25 ஆயிரத்து, 877 ஓட்டுச்சாவடிகள் அமைக் கப்பட்டன; 78 ஆயிரத்து, 903 ஓட்டுப்பதிவு இயந்தி ரங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது, மேயர் அல்லது சேர்மன் மற்றும் கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்கு,இரண்டு ஓட்டு போட்டனர்;

தற்போது, கவுன்சிலரை தேர்வு செய்வதற்கு, ஒரு ஓட்டு அளித்தால் போதும். எனவே, அதற்கு மட்டும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவை; மற்ற முக்கிய பதவிகளுக்கு, நேரடி தேர்தல்

இல்லாததால், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவையில்லை.


சென்னை உள்ளிட்ட மாநகராட்சி மேயர் தேர் தல் நடத்துவதற்கு, அதிகஅளவில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. இப்போது, அதற்கு அவசியம் இல்லை.முன்பு, பஞ்சாயத்து தலைவர் தேர்த லில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தாமல் இருந்தோம்; இப்போது, அதற்கு இந்த இயந்திரங்களை பயன் படுத்தலாமா என்பது குறித்து, பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...