வரும் செப்., 21 முதல் 10 நாளுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேற்பார்வை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி கண்காணிப்பு குழுக்கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்திற்கு இதுவரை 13 டி.எம்.சி., தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 4 அணைகளில் 27 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. 2017 ஜூலை வரை கர்நாடக மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக 21 டி.எம்.சி.,தண்ணீர் தேவைப்படுகிறது. கர்நாடகாவில் மழை அளவு 18 சதவீதம் குறைந்துள்ளது. எனவே இனிமேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலையில், விவசாயத்துக்கு தண்ணீர் தர முடியாது எனக்கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழகத்திற்கு கர்நாடகா தர வேண்டிய 64 டி.எம்.சி., தண்ணீரை தந்தே ஆக வேண்டும். கோடிக்காணக்கான விவசாயிகளின் உயிர்மூச்சாக விவசாயம் உள்ளது. குடிநீரை போலவே விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் செப்.,21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து காவிரி கண்காணிப்பு குழு தலைவர் சசிசேகர் கூறுகையில், நீர் இருப்பு, நீர் வரத்து உள்ளிட்டவை பற்றி ஆன்லைனில் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் . ஆன்லைன் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ள 2 ஆண்டுகளாகும். அறிவியல் பூர்வமான தகவல்கள் சேகரித்து முடிவு எடுக்கப்படும். நீர் திறக்க உத்தரவிட காவிரி கண்காணிப்பு குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கடந்த 15 நாளில் வந்த நீர் வரத்தை கருத்தில் கொண்டு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவு எனக்கூறினார்.