பத்தாம் வகுப்பு துணை தேர்வர்களுக்கு 23ல் செய்முறை தேர்வு !

திருவண்ணாமலை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, வரும், 23ம் தேதி முதல், மூன்று நாட்கள் செய்முறை தேர்வுகள் நடக்க உள்ளது என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.





இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ள, பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களால், வரும், 23, 24 மற்றும், 26ம் தேதி ஆகிய, மூன்று நாட்கள், அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தோல்வியுற்றவர்கள், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் செய்முறை தேர்வு எழுதிய பின் கட்டாயம் எழுத்துத் தேர்வு எழுத வேண்டும்.

அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்று, செய்முறை தேர்வு எழுதாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள், இதில் பங்கேற்கலாம். மேலும், அறிவியல் துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்கள் ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

அதில் செய்முறை தேர்வு நடைபெற உள்ள மையம், தேதி ஆகியவற்றினை அறிந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...