10ம் வகுப்பு துணைத்தேர்வு; ’தட்கள்’ முறையில் விண்ணப்பிக்கலாம்!!

செப்டம்பர் - அக்டோபர் 2016ல் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும்

தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ்  அரசு தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், கடலூர் மற்றும் சென்னை ஆகிய மண்டல அலுவலகங்களின் தலைமையிடத்தில்  தேர்வு மையம்  மற்றும்  மையங்கள் அமைக்கப்படும்.

தேர்வுக் கட்டணம்

தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை Registration Slip–ல் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வுக் கட்டணம் ரூ.125/- இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- ஆக ரூ.675/- பணமாக மட்டுமே அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

S வகையினர் (ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்)
ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்.
அறிவியல் பாடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
SP வகையினர் (நேரடித் தனித்தேர்வர்கள்)
எட்டாம் வகுப்பு தேர்ச்சி/ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான மாற்று சான்றிதழின் சுய சான்றொப்பமிட்ட நகல் (அல்லது)
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சிக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்
அறிவியல் செயல்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்கப்பட வேண்டும்.
மெட்ரிக்/ஆங்கிலோ இந்திய தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஒப்படைத்தல் வேண்டும்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள்

தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது, தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...