கொலை வழக்கில், ராமநாதபுரம் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால், அம்மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டுமானால், சிக்கல் அரசு பள்ளிக்கு மனுதாரர்கள் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்க
, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே கீரந்தையில், 2009 ல் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பிரச்னையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கண்ணன் உட்பட சிலர் மீது சிக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கண்ணன் உட்பட 4 பேருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் 2014 மார்ச் 12 ல் ஆயுள் தண்டனை விதித்தது.
அவர்கள்,&'கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டது. காலதாமதத்திற்கான காரணத்தை மன்னித்து மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும்,&' என மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு உத்தரவு: காலதாமதத்திற்கான காரணத்தை மன்னித்து, மனுவை விசாரணைக்கு ஏற்கும் வகையில், சிக்கல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனுதாரர்கள் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
அத்தொகையில், எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம்- தமிழ் அகராதியை தலைமை ஆசிரியர் வாங்கிக் கொடுக்க வேண்டும். மீதி பணத்தை மாணவர்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும்.
மூன்று வாரங்களுக்குள் பள்ளிக்கு மனுதாரர்கள் பணத்தை வழங்கி ஒப்புதல் பெற்று, அதை உயர்நீதிமன்றக் கிளை பதிவுத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றனர்.