சென்னை உள்ளிட்ட, ஆறு மாநகராட்சிகளுக்கு, பெண் மேயரை தேர்வு செய்யும் வகையில், இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அடுத்த மாதம் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் படி, பெண்களுக்கான, உள்ளாட்சி
பதவிகளை பிரிக்கும் பணிகள் முடிந்து, அரசாணை வெளியாகி உள்ளது. திருநெல்வேலி, திருச்சி, மதுரை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகள் பொது பிரிவினருக்கும், சென்னை, வேலுார், சேலம், கோவை, தஞ்சாவூர், திண்டுக்கல் என, ஆறு மாநகராட்சிகள், பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. துாத்துக்குடி மேயர் பதவி,
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.