பொரு­ளா­தார சுதந்­திரம்; 112வது இடத்தில் இந்­தியா!!!

உலக நாடு­களில் நிலவும் பொரு­ளா­தார சுதந்­திரம் குறித்த ஆய்­வ­றிக்­கையை, இந்­தி­யாவைச் சேர்ந்த, சிவில் சமூக மையம், கன­டாவின் பிரேசர் மையம் ஆகி­யவை இணைந்து வெளி­யிட்­டுள்­ளன.
அதன் விபரம்:உல­க­ளவில்,159 நாடுகள் மற்றும் பிராந்­தி­யங்­களில், அரசு கொள்­கைகள் உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­களின் செயல்­பா­டுகள் குறித்து ஆய்வு செய்து, குறி­யீட்டு பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்­டது. அதில், இந்­தியா அனைத்து பிரி­வு­க­ளிலும் மிகவும் பின்­தங்­கி­யுள்­ளது. உதா­ர­ண­மாக, நாட்டின் சட்ட திட்டம் மற்றும் சொத்­து­ரிமை பிரிவில், இந்­தியா, 86வது இடத்தில் உள்­ளது.
அது­போல, நிதி வளத்தில், 130; சுதந்­தி­ர­மான சர்­வ­தேச வர்த்­த­கத்தில், 144; கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களில், 132வது இடத்தில் உள்­ளது. ஒட்­டு­மொத்­த­மாக, உலக வர்த்­தக சுதந்­திர குறி­யீட்டில், இந்­தியா, 10 இடங்கள் பின்­னுக்கு தள்­ளப்­பட்டு, 112வது இடத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடத்தில், சீனா உள்­ளது. வங்­க­தேசம், 121வது இடத்­திலும், பாகிஸ்தான் 133வது இடத்­திலும், பின்­தங்­கி உள்­ளன.
பூடான், 78, நேபாளம், 108, இலங்கை, 111 ஆகி­யவை, இந்­தி­யாவை விஞ்­சி­யுள்­ளன. ஹாங்காங், உல­க­ளவில் பல்­வேறு பிரி­வு­களில், சிறப்­பான பொரு­ளா­தார சுதந்­திரம் உள்ள நாடு என்ற வகையில் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. அடுத்த இடங்­களில், சிங்­கப்பூர், நியூ­சி­லாந்து, சுவிட்­சர்­லாந்து, கனடா, ஜார்­ஜியா, அயர்­லாந்து, மொரீ­ஷியஸ், ஐக்­கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்­ளன. கடைசி 10 இடங்­களில், ஈரான், அல்­ஜீ­ரியா, சாத், நியூ­கி­னியா உள்­ளிட்ட நாடுகள் உள்­ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...