பெங்களூருவில் 144 தடை உத்தரவு வருகிற 25-ந் தேதி வரை நீட்டிப்பு போலீஸ் கமிஷனர் என்.எஸ். மேகரிக் அறிவிப்பு!!!

பெங்களூருவில் 144 தடை உத்தரவு வருகிற 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் கமிஷனர் என்.எஸ். மேகரிக் அறிவித்துள்ளார்.பெங்களூருவில் வன்முறை


தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் பெங்களூருவில் கடந்த 12-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பெங்களூருவில் 90-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், 50-க்கும் மேலான வாகனங்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. இதையடுத்து, பெங்களூருவில் 144 தடை உத்தரவும், 16 போலீஸ் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் அமைதி திரும்பியதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. அதுபோல, நேற்று முன்தினம் நள்ளிரவுடன் 144 தடை உத்தரவும் தளர்த்தப்படுவதாக போலீஸ் கமிஷனர் என்.எஸ். மேகரிக் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் என்.எஸ். மேகரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-144 தடை உத்தரவு நீட்டிப்பு

பெங்களூரு காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த 12-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. மேலும் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், ஏராளமான வாகனங்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. பொதுச் சொத்துகளும் சேதம் அடைந்தன. இதையடுத்து, பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு நேற்று நள்ளிரவு (அதாவது நேற்று முன்தினம்) வரை அமலில் இருந்தது.

பெங்களூருவில் தற்போது அமைதி திரும்பி இருப்பதால் 16 போலீஸ் நிலைய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வருகிற 25-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.காரணம் என்ன?

காவிரி பிரச்சினையில் வன்முறை வெடித்து தற்போது பெங்களூருவில் அமைதி திரும்பி இருந்தாலும், தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் பெங்களூரு போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூருவில் 144 தடையை நீட்டித்து போலீஸ் கமிஷனர் என்.எஸ். மேகரிக் உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் வருகிற 20-ந் தேதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருப்பதாலும், நேற்று கன்னட அமைப்பினர் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றதாலும், தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடப்பதாலும், காவிரி பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராத காரணத்தாலும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...