சென்னை,திறமையான, தகுதியானவர்களை அரசு வக்கீலாக நியமித்தால் அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் இனி அரசு வக்கீல்கள் நியமனம் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் நடைபெறவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.அரசியல்
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல்கள் வசந்தகுமார், ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சியின் வக்கீல்கள் அணியை சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் அரசு வக்கீல்களாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு வக்கீல் பதவி என்பது அரசியல் பதவி கிடையாது. ‘அட்வகேட் ஜெனரல் முதல் மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் அரசு வக்கீல்கள் வரை அனைவரும் ஆளுங்கட்சியினரின் சிபாரிசு பெற்றவர்களாகவே உள்ளனர். அரசு வக்கீல் பதவிகளுக்கு நேர்மையான, தகுதியான, திறமையான, அனுபவசாலிகளை வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும் என்று பல தீர்ப்புகளில் சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் கூறியுள்ளது. ஆனால் இந்த உத்தரவுகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை’ என்று கூறியிருந்தனர்.ஐகோர்ட்டு ஒப்புதல்
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பணி அனுபவம், தகுதி, திறமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் அரசு வக்கீல்களை நியமிக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்துக்கு பொருந்தாது. அரசு வக்கீல் நியமனம் அரசியல் கட்சிகளின் அடிப்படையில் நடைபெறவில்லை. அரசு தலைமை குற்றவியல் வக்கீல், கூடுதல் குற்றவியல் வக்கீல்கள் ஆகியோரது நியமனத்துக்கு ஐகோர்ட்டின் ஒப்புதல் பெறப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.வெளிப்படைத்தன்மை இல்லை
அப்போது மனுதாரர் வசந்தகுமார், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்றி தான் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் அரசு வக்கீல்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் இந்த நடைமுறை இல்லை’ என்று கூறினார்.இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–திறமையான, தகுதியான, அனுபவசாலிகளை அரசு வக்கீல்களாக நியமித்தால் தான் அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் அரசு வக்கீல்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே நாங்கள் இந்த வழக்கை 2 விதமாக பிரித்து உத்தரவிடுகிறோம். இனிமேல் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு வரைவு விதிகளை உருவாக்கி, அதன் அடிப்படையில்தான் அரசு வக்கீல்களை நியமிக்கவேண்டும்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
ஏற்கனவே நியமிக்கப்பட்ட அரசு வக்கீல்களை பொறுத்தவரை, அவர்களது நியமனம் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. அதேநேரம், இந்த அரசு வக்கீல்கள் நியமனத்தில் எந்த நடைமுறை பின்பற்றப்பட்டது? என்பது குறித்தும், பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும் உரிய ஆவணங்களை 3 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 20–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்