காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில்வன்முறை வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டனர். 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஐம்பதுக்கும்மேற்பட்ட லாரிகள் எரிக்கப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவுக்கும்வகையில் வணிகர்
சங்கபேரமைப்பு, கடை அடைப்பு போராட்டத்துக்கு வரும் 16ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளது. வணிகர்சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா, தமிழகத்தில் நாம் அனைவரும் முழு கடையடைப்பு நடத்திநம் எதிர்ப்பை ஒற்றுமையாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்து ஆதரவைக் கோரிவருகிறார். முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. அன்று ஹோட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் எதுவும்இயங்காது என்று தெரியவருகிறது. மேலும் அன்று தமிழக அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது என்றும்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த முழு அடைப்பை பெட்ரோல் பங்க்உரிமையாளர் சங்கத் தலைவர் கே.பி முரளி ஆதரித்துள்ளார். போராட்டம் நடைபெறும் அன்றுபெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டிருக்கும். அதுபோல, கோயம்பேடு மார்க்கெட்டும் மூடப்பட்டிருக்கும்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரித்துள்ள இந்தப் போராட்டம் முழு அளவு வெற்றிபெறுவதற்கானஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் வணிகர் சங்கத்தினர்.