பணிநீக்கம் செய்யப்பட்ட 17 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் வேலை மந்திரி தகவல்!!

புனே, பணி நீக்கம் செய்யப்பட்ட 17 ஆயிரம் ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே கூறினார்.பயிற்சி முகாம்

புனே, பிம்பிரி–சின்ச்வாட்டில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து பயிற்சி நிறுவனத்தில் மாநில போக்குவரத்து
கழக டிரைவர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமில் நேற்று முன்தினம் மாநில போக்குவரத்து மந்திரி திவாகர் ராவ்தே கலந்து கொண்டார். முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற டிரைவர்களிடையே திவாகர் ராவ்தே பேசியதாவது:–மாநில போக்குவரத்து துறையில் 1.1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 36 ஆயிரம் பேர் டிரைவர்கள். தற்காப்பு தொழில்நுட்பங்கள், மனஅழுத்த மேலாண்மை குறித்து டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக டிரைவர்கள் தங்களுடன் மனைவியுடன் இந்த முகாமில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.மீண்டும் வேலை

விபத்தில் உயிரிழக்கும் போக்குவரத்து கழக டிரைவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல பயணிகளுக்கும் இழப்பீடு கிடைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக டிக்கெட் கட்டணத்தில் ரூ. 1 உயர்த்த வேண்டி இருக்கும். மாநில போக்குவரத்து கழகத்தில் அற்ப காரணங்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 17 ஆயிரம் ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயத்தேவை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...