புதுடெல்லிநாடு முழுவதும் ஐகோர்ட்டுகளின் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 74 பேரின் பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு ‘கொலிஜியம்’ தேர்வுக்குழு சிபாரிசு செய்திருந்தது. அதற்கு ஒப்புதல் அளிக்கும் பணி, மத்திய அரசின் பரிசீலனையில்
உள்ளது.இந்நிலையில், அவர்களில் 18 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுதொடர்பான கோப்புகள், ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அடுத்த வாரம் 18 புதிய நீதிபதிகளும் நியமிக்கப்படுவார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய நீதிபதிகளில் பெரும்பாலானோர் சென்னை ஐகோர்ட்டுக்கும், சிலர் ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஐகோர்ட்டுகளுக்கும் நியமிக்கப்படுகிறார்கள்.