உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஏன்?

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம், அக்., 24ல் முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை, ஜூலை மாதம், மாநில தேர்தல் கமிஷன் துவக்கியது.

இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கான ஒதுக்கீட்டை, 33 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக
அரசு உயர்த்தியது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, உள்ளாட்சி தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.



இதுகுறித்து, தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி உள்ளிட்ட, சில மாவட்டங்களில் மட்டுமே, மாநில தேர்தல் கமிஷனர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. பெண்களுக்கான உள்ளாட்சி பதவிகளை பிரிப்பதில், இழுபறி நீடிக்கிறது. இதனால், மற்ற மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு, தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, மாவட்ட கலெக்டர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, ஓட்டுச்சாவடி பட்டியலை, பல கலெக்டர்கள் வெளியிடவில்லை; இப்பிரச்னைகள் குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...