நாட்டிலேயே மிகக் குறைந்த கட்டணமான ரூ.149 என்ற ஆரம்ப விலையில் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் சமீபத்தில் அறிமுமகம் செய்தது. ஜியோ என பெரியடப்பட்டுள்ள இந்த சேவையை, அதை விட குறைந்த கட்டணத்தில், 2ஜி மற்றும் 3 ஜி சேவையை மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
ரூ.2 முதல் 4 என்ற கட்டணத்தில் இலவச வாய்ஸ் கால் சேவையை வழங்க உள்ளதாகவும், இந்த புதிய சேவையை புத்தாண்டில் இருந்து அறிமுகம் செய்ய உள்ளதாகவும் பிஎஸ்என்எல் தலைவரும் மேலாண் இயக்குனருமான அனுபம் ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக, அதிக வாடிக்கையாளர்கள் உள்ள கேரளா, இமாச்சல பிரதேசம், அரியானா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் உ.பி., ஆகிய மாநிலங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும் ஸ்ரீவட்சவா கூறுகையில், வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருக்கும் பிஎஸ்என்எல் மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்படும். இந்த இலவச வாய்ஸ் கால் சேவை வீட்டில் இருக்கும் போது மட்டுமின்றி, வெளியிலும் வழங்கப்படும் என்றார்.