இரு மாநில சட்டம் ஒழுங்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கடந்த 12ஆம்

தேதி கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்ய அந்த மீது உத்தரவு ஒன்றை பிறப்பித்த உச்சநீதிமன்றம் 20ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையொட்டி பெரும் கலவரங்கள் வெடித்தன. கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகளும் வணிக நிறுவனங்களும் தாக்கப்பட்டன. இதனால் ரூ.25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல தமிழகத்திலும் சில இடங்களில் நடைபெற்ற சில சம்பவங்களால் பதற்றம் நிலவியது. இந்த வன்முறைகள் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு சிவக்குமார் என்பவர் சார்பாக மூத்த வக்கீல் ஆதிஷ் அகர்வால், வக்கீல் என்.ராஜாராமன் ஆகியோர் நேற்று ஆஜராகி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் வன்முறை சம்பவங்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இரு மாநிலங்களிலும் கலவரத்தைத் தூண்டும் சிலரின் செயல்களால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அந்த மனுவை அவசர வழக்காக ஏற்று உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனு தாக்கல் செய்ய அனுமதிப்பதாகவும், அந்த மனு, நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். இதனை அடுத்து மனுதாரர் சிவக்குமார் நேற்று காலை உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். இரு மாநிலங்களிலும் நிலவும் பதற்றச் சூழலை கட்டுக்குள் கொண்டு வந்து இரு மாநில அரசுகளும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று வியாழக்கிழமையன்று நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...