வருமான வரித்துறை அடுத்த மாதம் முதல் அதிரடி நடவடிக்கை !

தமிழகத்தில் வருமான வரி செலுத்தாத, கறுப்புப்பணம் வைத்துள்ளவர்களின் பட்டியலை வருமான வரித்துறை தயாரித்துள்ளது. அடுத்த மாதம் முதல் அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கணக்கில் வராத கறுப்புப்பணத்தை வெளியே கொண்டு வர தாமாக முன்வந்து விவரங்களை வெளியிடும்
திட்டத்தை ஜுன் மாதத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. கணக்கில் காட்டாத அசையும், அசையா சொத்துகள், ரொக்கப் பணத்தின் விவரத்தை, வருமான வரித்துறையிடம் தெரிவித்தால் 45 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கறுப்புப்பணம் பற்றிய விவரங்களை வருமான வரித்துறைக்கு பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆயினும், தமிழகத்தில் பலர் சொத்து விவரங்களை மறைத்து வருகின்றனர். அந்த, முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பற்றிய விவரங்களை, வருமான வரித்துறை சேகரித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு - புதுச்சேரி வட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: “மறைத்து வைத்துள்ள வருமானத்தை தெரிவிக்கும் திட்டம் தமிழகத்தில் நல்ல பலனை தந்துள்ளது. இது தொடர்பாக வங்கி, நிதி நிறுவன வைப்பு தொகை, பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், கறுப்புப்பணத்தை மாற்ற நடந்த சொத்து பரிவர்த்தனைகள், நன்கொடைகள், மருத்துவக் கல்லுாரிகளில் சேர செலுத்திய, ‘கேபிடேஷன் பீஸ்’ போன்ற பல தகவல்களை சேகரித்துள்ளோம். இதுகுறித்த விரிவான பட்டியலை தயாரித்து உள்ளோம். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து கறுப்புப்பண விவரங்களைத் தெரிவித்தால் தப்பலாம்; வருமான வரி அல்லது சொத்து வரி சட்டத்தின் கீழ் விசாரணையோ, ஆய்வோ நடத்தப்படாது. கறுப்புப் பணம் பற்றிய விபரங்களை தெரிவிக்காதோர் மீது, அக்டோபர் மாதம் முதல் நடவடிக்கை தொடங்கும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

‘கறுப்புப்பண விவரங்களை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்காதோரை வருமான வரித்துறை சும்மாவிடாது. வரி ஏய்ப்பு செய்தோர், கடந்த காலங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே நடவடிக்கையை எடுக்கும் நிலைக்கு, மத்திய அரசை தள்ளி விடாதீர்கள்’ என, பிரதமர் மோடி, எச்சரித்துள்ளதையும், அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், “குறிப்பிட்ட, எந்த அரசியல் கட்சியினரையும் குறிவைத்து, நாங்கள் பட்டியல் தயாரிக்கவில்லை. ஆளுங்கட்சி பிரமுகர்கள் பற்றி, உரிய ஆதாரங்கள் கையில் சிக்கினால், நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி வீட்டில் நடந்தது போல், நடவடிக்கை எடுக்கப்படும். ‘அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்த, யாருடைய முன் அனுமதியும் தேவை இல்லை’ எனவும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...