இந்தியாவில் ஐஃபோன்களின் குறைப்பு: ஆப்பிள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை மந்தமாக உள்ளதால் ஐ போன் 6 எஸ் மற்றும் ஐ போன் 6 எஸ் பிளஸ் ஆகியவற்றின் விலையை 22 ஆயிரம் ரூபாய் வரை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது .



இந்த விலை குறைப்பு மூலம் 82,000 ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஐ போன் 6 எஸ் (128 ஜிபி),இனி 60,000 ரூபாய்க்கு இந்தியாவில் வாங்க முடியும்.இதே போல் ஐ போன் 6 எஸ் பிளஸ் 22,000 ரூபாய் விலை குறைந்து 70,000 ரூபாய்க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான 4-இன்ச் ஐ போன் SE போன்களின் விலையையும் ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.49,000 விலையுள்ள இந்த போன் இனி 44,000 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்குறைப்பு புதிதாக ஆப்பிள் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடும் என நம்பப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...