தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய, மாநில போலீசாருக்கு மதிப்பு ஊதியம் தேர்தல் கமிஷன் அறிவிப்பு!!!

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதுபோல், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய, மாநில ஆயுதப்படை போலீசாருக்கும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதை ஏற்று போலீஸ் படையினருக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இது, இடைத்தேர்தலுக்கும் பொருந்தும்.

15 நாட்கள் அல்லது அதற்கு குறைவான நாட்கள் தேர்தல் பணியாற்றினால், போலீஸ் அதிகாரிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.2,500–ம், கீழ்நிலை அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரமும், இதர அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ரூ.1,500–ம் வழங்கப்படும். 15 நாட்களுக்கு மேல் தேர்தல் பணி நீடித்தால், கூடுதலான ஒவ்வொரு வாரத்துக்கும் மேற்கண்ட 3 பிரிவினருக்கும் முறையே ரூ.1,250, ரூ.1,000, ரூ.750 என கூடுதலாக வழங்கப்படும். இருப்பினும், அவர்களுக்கு அவர்களது ஒரு மாத சம்பளத்துக்கு மிகாத அளவுக்குத்தான் மதிப்பூதியம் வழங்கப்படும்.

பாராளுமன்ற தேர்தலாக இருந்தால், மதிப்பூதிய செலவை மத்திய அரசும், சட்டசபை தேர்தலாக இருந்தால் அந்த மாநில அரசும் ஏற்றுக்கொள்ளும். ஒரே நேரத்தில் நடைபெறும் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களாக இருந்தால், மத்திய அரசும், மாநில அரசுகளும் பாதிப்பாதி செலவை ஏற்றுக்கொள்ளும். இந்த மதிப்பூதியம், முன்தேதியிட்டு அமல்படுத்தாததால், இனிமேல் நடக்கும் தேர்தல்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...