வேட்பாளர் புகாருக்கு முக்கியத்துவம் : ஆள்மாறாட்டத்தை தடுக்க ஏற்பாடு !!!

 'ஆள்மாறாட்டத்தை தடுக்க, வேட்பாளர் அளிக்கும் இறந்தோர் பெயரை, வாக்காளர் பட்டியலில் குறியிட வேண்டும்' என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் வாக்காளர்கள் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில்
இறந்தோர், 'டபுள் என்ட்ரி' வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் இறந்தோரின் பெயரில் சிலர் ஆள்மாறட்டம் செய்து ஓட்டளித்ததாக வேட்பாளர்களே புகார் தெரிவித்தனர். சில இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டது. இதை தடுக்க, வேட்பாளர்கள் அளிக்கும் இறந்தோர் பெயர்களை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் குறியிட்டு கொள்ள வேண்டும்.அந்த பட்டியலை தான் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கும் அளிக்க வேண்டும்.
மேலும் வாக்காளர் சேர்ப்பு அலுவலர் (வருவாய் கோட்டாட்சியர்) அனுமதியின்றி வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல் போன்ற எந்த மாறுதலையும் செய்ய கூடாது. பட்டியலில் குறியிடப்பட்ட பெயரில் யாரேனும் ஓட்டளிக்க வந்தால், அவர் உண்மையானவரா என்பதை உறுதி செய்தபின்பே அனுமதிக்க வேண்டும். போலியாக இருந்தால் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...