இந்தியாவின் நடவடிக்கைக்கு வெளிநாடுகள் வரவேற்பு !

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய தாக்குதலுக்கு வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

யூரி தாக்குதலை தொடர்ந்து, நேற்று இரவு இந்திய ராணுவத்தின் சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 38
பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது பாக்., சாட்டிலைட் மூலம் கண்காணிக்கப்பட்டது. டுரோன் மூலமும் தரை மூலமும் புகைப்படம் எடுக்கப்பட்டது. பாக்., பதிலாக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் முப்படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 30 நாடுகளிடம் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாகவும், தற்போதைய சூழல் தொடர்பாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், யூரி தாக்குதல் சம்பவம் மூலம் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது எனக்கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...