வேகமான வளர்ச்சியில் இந்திய வங்கிகள் - ஆய்வு!

இந்திய வங்கிகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் வாராக் கடன் பிரச்னைகளிலிருந்து அடுத்த 18 மாதங்களில் மீண்டு, நிலையான இடத்தைப்பெறும் என்று மூடீஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது.



‘மூடீஸ் இன்வெஸ்டர் சர்வைஸ்’ நிறுவனம் இந்திய வங்கிகள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 4.6 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் அது இரட்டிப்பாகி 8.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் தற்போதைய சூழலில் வங்கிகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

எனவே, வாராக் கடன்களின் அளவைவிட வருவாய் அதிகமாக இருக்கும். ரிசர்வ் வங்கி சமீபத்தில் இந்திய வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி மூலதனத் தொகை ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, இந்த மூலதனத் தொகை வங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும். ரிசர்வ் வங்கி ஒதுக்கீடு செய்துள்ள தொகை எதிர்பார்த்ததைவிடக் குறைவு என்பதால் கடன் அளவு குறைய வாய்ப்புள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி வாராக் கடன்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், அடுத்த இரண்டு வருடங்களில் இந்திய வங்கித்துறை வாராக் கடன்களிலிருந்து மீண்டு நிலையான வளர்ச்சியை அடையும் என்று தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...