புதுச்சேரியில் 4 ஆயிரம் ஆட்டோக்கள், 6,000 ஆட்டோ ஓட்டுநர்கள், 3600 ஆட்டோ உரிமையாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பைப் பார்த்த காங்கிரஸ், அதன் கூட்டணியில் உள்ள திமுக ஆகிய இரண்டும் தங்கள் தொழிற்சங்கங்களில் உள்ள ஆட்டோக்கள் ஓடும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கட்சிகள் சாராத, புதுவை மாநில ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் மணிவண்ணனிடம் இதுபற்றி பேசினோம்.புதுச்சேரியில் ஆட்டோவைவிட, வாடகை டூ வீலர்கள் 6 ஆயிரம் வண்டிகள் உள்ளது, நாங்கள் பர்மிட் போட்டு வரிகட்டி, தெருத் தெருவாக அலைந்து போதுமான வருமானம் இல்லாமல் வீட்டுக்கு வருகிறோம். மூன்று ஆண்டுகளுக்குமுன்பு மீட்டருக்கு மினிமம் 25 ரூபாய்க்கு ஓட்டச் சொன்னதையே இப்போதும் ஓட்டச் சொல்கிறார்கள். அதை சட்டமன்றத்தில்வேறு அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் மினிமம் கட்டணத்தை 40 ரூபாயாக உயர்த்திக் கேட்கிறோம்.
எங்கள் கோரிக்கையை கொஞ்சமும் செவிகொடுத்துக் கேட்கவில்லை, துணை நிலைஆளுநர் கிரண்பேடி வீதிவீதியாக வலம் வருகிறார், சுத்தம் செய்கிறார், ஆனால் மிஷின் தெருவில் சுத்தம் செய்யப்போனால் தெரியும் ஆயிரக்கணக்கில் வாடகை டூ வீலர்கள் நிறுத்தப்பட்டிருப்பது. ஆகவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம்.எங்கள் கோரிக்கை இரண்டுதான்: மினிமம் கட்டணம் 40 ஆக நிர்ணயிக்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்” இதுவே எங்கள் கோரிக்கை என்றார்.