வேலைபார்க்கும் பெண் விவாகரத்து கோரிய வழக்கில், அப்பெண்ணுக்கு இடைக்கால பராமரிப்பு வழங்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சொந்தமாக தன் காலில் நிற்கக்கூடிய திறமையிருக்கும் பெண்கள், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். மாறாக, பிரிந்துசென்ற கணவனிடமிருந்து பராமரிப்புக்கான பணத்தை கேட்கக்கூடாது என்று அறிவுரையும் வழங்கியுள்ளது.
வழக்குத் தொடுத்த வாதிக்கும் பிரதிவாதிக்கும், 2005ஆம் ஆண்டு டெல்லியில் திருமணம் நடந்துள்ளது. பெண்ணின் கணவர் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சொந்தமாகத் தொழில்புரிந்து வந்துள்ளார். இந்நிலையில், பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி கணவர் விவகாரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்தப் பெண், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். விவாகரத்து மனுவில், இடைக்கால பராமரிப்புகளுக்காக தனது குழந்தைக்கும், தனக்கும் மாதம் மூன்று லட்சம் வழங்க வேண்டும். வழக்கு சம்பந்தமான செலவுகளுக்கு ஒரு லட்சமும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது. மேலும் நீதிமன்றம், அப்பெண்ணின் இரண்டு குழந்தைகளுக்கும் மாதம் 22,900 வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் பட்டய கணக்காளராக பணியாற்றும் இவருக்கு, இடைக்கால பராமரிப்பு வழங்க முடியாது என உத்தரவில் கூறியுள்ளது. அவருடைய வருமானத்தில் அவருக்கான தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியும் என்பதால், இடைக்கால பராமரிப்பு வழங்க முடியாது என்று நீதிபதிகள் பிரதிபா ராணி மற்றும் பிரதீப் நந்த்ரஜோக் ஆகியோர் உத்தரவில் கூறியுள்ளனர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஒரு வழக்கில், கணவனைப் பிரிந்த ஒரு பெண் தனது மகளுக்கும் தனக்கும் சேர்த்து பராமரிப்புத் தொகை வழங்க கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவை விசாரித்த கீழ்நீதிமன்றம், ‘பெண் வேலைக்குச் சென்று பொருளீட்டி வருகிறார். எனவே, மைனர் பெண்ணான அவரது மகளுக்கு மட்டும் பெண்ணின் கணவர் இடைக்கால பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ. 16 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த இடைக்கால பராமரிப்பு வழங்குவதும், ஆயுளுக்குமான பராமரிப்புத் தொகை வழங்குவதும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான விஷயமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து, நாடு தழுவிய அளவில் ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. காரணம், முன்பைவிட இப்போது விவாகரத்து வழக்குகள் அதிகரித்துவரும்நிலையில் இம்மாதிரியான சூழ்நிலையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.