பூத் சிலிப் அச்சடிப்பு; தேர்தல் கமிஷன் உத்தரவு !

உள்ளாட்சி தேர்தலுக்கான, பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகளை, அக்., 1க்குள் முடிக்க வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மாநில தேர்தல் கமிஷன் அறிக்கை: சட்டசபை தொகுதிகளுக்கான
வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான, வாக்காளர் பட்டியல், செப்., 19ல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் திருத்த பட்டியலை, வரும், 26ம் தேதிக்குள், வெளியிட வேண்டும்.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரை, வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்யலாம். மாவட்ட தேர்தல் அதிகாரிகள், பூத் சிலிப் அச்சடிக்கும் பணிகளை, வரும், 27ம் தேதி துவங்கி, அக்., 1க்குள் முடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...