ரயில்வேக்கு என்று இனி தனி பட்ஜெட் கிடையாது, பொது பட்ஜெட் உடன் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு நிதியாண்டும் ரயில்வேக்கு தனி பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டு தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சரும், பொது பட்ஜெட்டை நிதியமைச்சரும் தாக்கல்
செய்வார்கள். ஆனால் இதை மாற்ற வேண்டும் என்று பலரும் கோரினர். வருகிற ஆண்டு முதல் இதில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர் இதுப்பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் பேசுகையில், ‛‛இனி மேல் ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் ஆகியன இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். அதேசமயம் ரயில்வே துறை சுயமாக செயல்படும் உரிமம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். திட்டம் மற்றும் திட்டமிடப்படாத சீர்திருத்தங்களுக்கான அறிவிப்புக்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட் ஒன்றாக இணைக்கப்படும் என்றார்.