சிறையில் என் மகனை கொலை செய்து விட்டனர் - ராம்குமாரின் தந்தை குற்றச்சாட்டு !

புழல் சிறையில் என் மகனை கொலை செய்து விட்டனர் என்று சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதொடர்பாக
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1ம் தேதி போலீசார் கைதுசெய்து சென்னையில் புழல் சிறையில் அடைத்தனர்.
ராம்குமாரை போலீசார் கைது செய்யும் போதே அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராம்குமார், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.

ராம்குமார் கொலையாளி இல்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரது கையெழுத்து பரிசோதனை செய்யவும் போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் தான் சுவாதியைக் கொலை செய்யவில்லை என்றும், கையெழுத்து பரிசோதனைக்கு உடன்படமாட்டேன் என்றும் அவர் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...