34% இந்திய பணியாளர்கள் திறமையற்றவர்கள்! !

சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, ‘இந்திய பணியாளர்களில் 34% பேர் திறமையற்றவர்களாக இருக்கின்றனர்’ என தெரிவித்துள்ளது. ‘பி.என்.பி. மெட்லைப்’ பணியாளர் நலன் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. அதில், ஆறு நாடுகளில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களிடம் இந்த

ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து பி.என்.பி. மெட்லைப் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், போலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு போன்ற நாடுகளில் 40% திறமையற்றவர்களாக உள்ளனர். சீனாவில் 47% திறமையற்றவர்களாக உள்ளனர். ரஷ்யாவில் 56% திறமையற்றவர்களாக உள்ளனர் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொதுவாக அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், கவர்ந்திழுக்கவும் சம்பளம் மற்றும் சலுகைகளில் அதிகம் கவனம் செலுத்துவது வழக்கம். இந்நிலையில், பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள வெறும் சம்பளம் மட்டும் போதுமானதாக இல்லை; அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அறிக்கை தெரிவித்துள்ளது.

எல்லா நிறுவனங்களும் மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக பணியாளர்களை ஈர்க்க சலுகைகளை வழங்குகிறது என ஆய்வில் கலந்து கொண்ட 88% இந்திய பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான எம்.என்.சி. நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

பணியாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டியது அதிகரித்து வருவதால், மிகச் சிறிய நிறுவனங்களும் திறமையானவர்களை பணியில் தக்கவைத்துக் கொள்ள வரும் ஆண்டுகளில் சலுகைகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதில் உடல்நலம் சார்ந்த சலுகைகள், ஓய்வுகால சலுகைகள் மற்றும் நிதி சார்ந்த திட்டங்கள் போன்றவை அடங்கும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய தொழிலாளர்களின் நிலைமை, தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு ஆகியன குறித்து பி.என்.பி. மெட்லைப் நிறுவனத்துக்காக நீல்சன் நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில், 65 சதவிகித பணியாளர்கள் ஆயுள் காப்பீடு குறித்து அதிகம் கவலைப்படுவதால், அவர்களின் கவனம் பணியில் குறைவதாக அறிக்கையில் தெரிவித்தது. இதனால், திறமையான பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள நலத் திட்டங்களே சிறந்த வழி என அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...