ஐந்து வழக்கறிஞர்கள் நீக்கம்: கர்நாடக பார் கவுன்சில் உத்தரவு!!!

கட்டாய ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து போராடிய மதுரையைச் சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக பார் கவுன்சில். இந்த உத்தரவு மதுரை வழக்கறிஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், நீதித்துறை குறித்தும் விமர்சனங்கள் தெரிவித்தனர். இதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி, வழக்கறிஞர்கள் சங்கரநாராயணன், ஆறுமுகம் உள்ளிட்ட பதின்மூன்று பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை, கர்நாடக பார் கவுன்சிலுக்கு மாற்றி, இந்திய பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக பார் கவுன்சில், ஏ.கே.ராமசாமி, தர்மராஜ், சங்கரநாராயணன், ஆறுமுகம், நெடுஞ்செழியன் ஆகிய ஐந்து வழக்கறிஞர்களின் பெயர்களை பார் கவுன்சில் பதிவிலிருந்து நீக்கி, பணிபுரிய நிரந்தமாக தடை விதித்தது. மீதமுள்ள எட்டு வழக்கறிஞர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிபுரிய தடை விதித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...