மூன்று பேரின்
மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை அமெரிக்காவில் பிறந்துள்ளது என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கி, ஒரு கருவை உருவாக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு வளர்சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள், ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி
வகுக்கிறது. இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் பிறந்த ஐந்து மாத ஆண் குழந்தைக்கு, அதன் தாய் மற்றும் தந்தையிடமிருந்து கிடைக்கும் வழக்கமான மரபணுவைத் தவிர, கூடுதலாக ஒரு மரபணுக் கொடையாளியிடமிருந்த சிறிய ஒரு மரபணுக் குறியீடும் கிடைத்திருக்கிறது.

அந்தக் குழந்தையின் ஜோர்டானியத் தாயின் மரபணுவில் இருக்கும் ஒரு மரபணு பிரச்சனை குழந்தைக்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த தொழில்நுட்ப நடவடிக்கையை அமெரிக்க மருத்துவர்கள் எடுத்தனர்.
இந்த சிகிச்சை முறையின் மூலம் கருவுறல் மருத்துவத்தில் புதியதொரு சகாப்தம் உண்டாகியுள்ளது எனவும், இதுபோன்று அபூர்வ மரபணு பிரச்சனைகள் கொண்ட குடும்பங்களுக்கு இது உதவும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால் `மைட்டொகாண்ட்ரியல்` நன்கொடை (mitochondrial donation) என்றழைக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் முன், கடுமையான சோதனைகள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.